×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நுங்கு, இளநீர் விற்பனை மும்முரம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சோழந்தூர், ஆனந்தூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் தற்போதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கடந்தாண்டு இப்பகுதியில் சரிவர மழை பெய்யாததால் கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லை. இதனால் வெப்பம் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க இப்பகுதியில் பல இடங்களில் இளநீர், நுங்கு கடைகள் புதிதாக தோன்றியுள்ளன. இந்த கடைகளில் வெளிய செல்லும் மக்கள் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்குகளை வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் பல இடங்களில் சாலையோரமாக தர்ப்பூசணி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் கார், டூவீலர் போன்ற வாகனங்களில் செல்வோர்கள் வாகனங்களை நிறுத்தி தர்ப்பூசணியை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

மேலும் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெறும் சந்தை நாட்களில் கிராமப்புற மக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் கோடை வெயிலை சமாளிக்க, அங்கு மிக குறைந்த விளையில் கிடைக்கும் கரும்பு ஜூஸ், தர்ப்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். இது கோடை காலத்திற்கு மிகவும் சிறந்த நீராதரமாக இருக்கிறது. எனவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தற்போது இளநீர், நுங்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நுங்கு, இளநீர் விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : R.S.Mangalam ,Nungu ,Ilanair ,RS Mangalam ,Uppur ,Tiruppalaikudi ,Cholandur ,Anandur ,
× RELATED கற்காத்தக்குடி ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்