×

கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு

குமரி: கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு 16.06.2023 முதல் 31.10.2023 வரை தினசரி வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல ஈரோடு மாவட்டம், 2023-2024- ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் 16.06.2023 முதல் 13.10.2023 வரை 5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

The post கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Gotham Irrigation ,Kumari ,Tamil Nadu government ,Gothayyar Irrigation ,Rathapuram Canal ,Gothayam Irrigation Project ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...