×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை: மகிழ்ச்சியில் திளைக்கும் பயணிகள்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை புறநகர் மற்றும் மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் குடிநீர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ அதிகாரி கூறும்போது, ‘’கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் பயணிகள், பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் உடனடியாக சரிசெய்ய ஆட்களை வைத்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள் கழிவறைகளை இலவச பயணிகள் பயன்படுத்துகின்றனர். குடிநீர் குழாய், இலவச கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்றால் பேருந்து நிலையத்தில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். புகாரின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்’ என்றார்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை: மகிழ்ச்சியில் திளைக்கும் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Coimbadu Bus Station ,Annagar ,Chennai ,Coimbade Bus ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...