×

இந்திய தூதரக தாக்குதல் விவகாரம்; 45 குற்றவாளிகளின் விபரம் வெளியீடு: தகவல் தெரிவிக்க என்ஐஏ வேண்டுகோள்

புதுடெல்லி: லண்டனில் இந்திய தூதரக தாக்குதலில் ஈடுபட்ட 45 காலிஸ்தானி ஆதரவாளர்களின் விபரத்தை என்ஐஏ வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை கடந்த மார்ச் 19ம் தேதி காலிஸ்தானி ஆதரவு அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்கள் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டதுடன், அங்கிருந்த தேசியக் கொடியையும் அவமதித்தனர். இவ்விவகாரத்தில் லண்டன் காவல் துறை மீது இந்தியா குற்றம்சாட்டி
யது.மேலும் தூதரகத்தை சேதப்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேநேரம் தூதரக தாக்குதல் விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று என்ஐஏ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘லண்டன் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் தேசிய கொடியை அவமதித்த சம்பவத்தில் தொடர்புடைய விவகாரத்தில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்கள் இந்த வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் +91 72900 09373 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

The post இந்திய தூதரக தாக்குதல் விவகாரம்; 45 குற்றவாளிகளின் விபரம் வெளியீடு: தகவல் தெரிவிக்க என்ஐஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Indian ,Embassy ,NIA ,New Delhi ,Indian Embassy ,London ,England ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு