×

செந்தில்பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைப்பதை அமலாக்கத்துறை தாமதப்படுத்துகிறது: திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி

சென்னை: செந்தில்பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைப்பதை அமலாக்கத்துறை தாமதப்படுத்துகிறது என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர், குடும்ப உறுப்பினர்களிடம் முறைப்படி தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். மற்ற விஷயங்களை விட செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பது முதன்மையானது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் காலம் தாழ்த்த வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் நோக்கம். இஎஸ்ஐ மருத்துவர்களின் அறிக்கையை ஏற்க அமலாக்கத்துறை மறுக்கிறது.

அமலாக்கத்துறை தனி சட்டத்தை பின்பற்றுகிறதா என்பதை நீதிபதிகளே முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதில் அமலாக்கத்துறை காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறினார்.

The post செந்தில்பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைப்பதை அமலாக்கத்துறை தாமதப்படுத்துகிறது: திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Saravanan ,Djagam ,Prosecutor ,Chennai ,Enforcement Department ,Dishagam ,
× RELATED கும்பகோணத்தில் பெண்னை கொலை செய்த வழக்கு: தையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை