×

பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

குஜராத்: பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கி நள்ளிரவு 11.30 மணி வரை புயல் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் ஜக்காவு துறைமுகத்திற்கு 140 கி.மீ. மேற்கு-தென்மேற்கில் மிக தீவிர புயல் பிபோர்ஜாய் மையம் கொண்டுள்ளது.

பிப்பர்ஜாய் புயலை முன்னிட்டு நிவாரண பணிகளுக்கு ராணுவம், கடற்படை உள்ளிட்ட ஆயுத படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச் – பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோர பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை 74,000 மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருதஞ்சய் மொகபத்ரா இன்று கூறும்போது, பிப்பர்ஜாய் புயல் ஆனது, ஜக்காவ் துறைமுகத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் சவுராஷ்ரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. அது அரபிக்கடலின் வடகிழக்கே மையம் கொண்டு உள்ளது.

 

The post பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Research Centre ,Gujarat ,Cyclone ,Biborjoy Storm ,Indian Meteorological Centre ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி