×

பெட்ரோ கெமிக்கல் ஆலையில் வேலை டிப்ளமோ/ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

கர்நாடகா, மங்களூரிலுள்ள பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் நிர்வாகம் அல்லாத பணிகளுக்கு டிப்ளமோ, பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Non-Management Cadre Staff
i): Chemical : 19 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-4, எஸ்டி-2). தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்/பாலிமர் இன்ஜினியரிங்/ரீபைனரி இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
ii) Electrical: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1).
iii) Mechanical: 19 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-3, எஸ்சி-5, எஸ்டி-2) தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iv) Chemistry: 1 இடம் (பொது). தகுதி: வேதியியல்/அனல்டிக்கல் வேதியியல்/ தொழில் வேதியியல்/ பாலிமர் வேதியியல்/பயன்பாட்டு வேதியியல் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
v) Draftsman: 1 இடம் (பொது). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஆட்டோகாட் சாப்ட்வேர் சான்றிதழும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
vi) Secretary: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: கமர்ஷியல் பிராக்டீசில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 120 மற்றும் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 20.06.2023 தேதியின்படி 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.25,000- 86,400.

எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.118/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.mrpl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2023.

The post பெட்ரோ கெமிக்கல் ஆலையில் வேலை டிப்ளமோ/ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Petrochemical Replication Plant ,Mangalore, Karnataka, P. ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...