×

நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறைதான்!: ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது.. அமைச்சர் ரகுபதி பேட்டி..!!

சென்னை: ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை நேற்று (ஜூன் 14) கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. சிறைத்துறை விதிப்படி ஒரு நாளுக்கு 3 பேர் மட்டும் தான் மனு அளித்து சந்திக்க முடியும். செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறினார். மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். சட்டப்போராட்டத்தின் மூலமாக நல்ல தீர்ப்பினை பெற முடியும் என்பதில் நம்பிக்கை உடையவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பினை பெறுவோம் என்றார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று நான் நேற்றே கூறினேன். ஒரு மனிதரை ஏறக்குறைய 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை. நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்துக்கொண்ட விதம் தான் என்று தமிழ்நாடு முதல்வரும் தெளிவாக கூறியுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறைதான்!: ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது.. அமைச்சர் ரகுபதி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Rakubati ,Chennai ,Raghubathi ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...