×

செந்தில் பாலாஜியின் தலையில் காயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்: மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

 

சென்னை: செந்தில் பாலாஜியின் தலையில் காயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்; கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்று மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி அளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமைகள் மீறல் நடந்ததா என ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மனித ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்.

தனக்கு இருக்க கூடிய இதய நோயையும் பற்றியும் 3 அடைப்புகள் இருப்பது பற்றியும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அதிகமாக பேசமுடியவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தனக்கு அதிகமாக தொல்லை கொடுத்த அதிகாரிகளின் பெயர்களை என்னிடம் கூறியுள்ளார். ஏற்கனவே புகார்கள் பெறப்பட்ட நிலையில் இன்றும் புகார்கள் என்னிடம் வந்துள்ளது. புகார்களின் அடைப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நாளை விசாரணை செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத்தை பொறுத்தவரை தாமாக முன்வந்து விசாரிக்கலாம், புகார்களின் அடிப்படையில் விசாரணையை விசாரிக்கலாம். ஆனால் நேற்றைய தினம் நடந்த செய்திகள் மற்றும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மனித மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.

The post செந்தில் பாலாஜியின் தலையில் காயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்: மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Human Rights Commission ,Chennai ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...