×

தமிழகத்தில் செங்கல்பட்டு,செங்குன்றம் திருக்கோவிலூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் நடத்த விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மெது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் இருந்து மேல்மருத்துவர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சேகர் அவரது மனைவி ராணி, பேத்தி அக்சயா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு திரும்பிய பொது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பால் ஏற்றி சென்ற வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். காக்களூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேன் ஓட்டுநர் ராஜேந்திரன்(43), உஜால்(25), பப்பு மானிக்ராய்(32) ஆகியோர் உயிரிழந்தனர். மின்று பேரின் சடலங்களை மிட்ட போலீசார் உடற்குரு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அடையாளம் தெரியாத வாகனம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியை சேர்ந்த பேண்ட் வாசிப்பாளர்கள் 10 பேர் ஷார் ஆட்டோவில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுக்கொண்டிருந்த போது அரசு பேருந்து ஒன்று அந்த ஷேர் ஆட்டோவில் மோதியது இந்த விபத்தில் சாரதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடலை தருமபுரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தமிழகத்தில் செங்கல்பட்டு,செங்குன்றம் திருக்கோவிலூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் நடத்த விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chengalpattu ,Thirukovilur ,Melmaruvathur ,Sengunram Tirukovilur ,
× RELATED சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க...