×

மீண்டும் புதிய உச்சம்: சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்பாடு.. டான்ஜெட்கோ அறிவிப்பு..!!

சென்னை: சென்னை மின் பயன்பாட்டில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 91.1 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதே முந்தைய உச்சமாக இருந்தது. சென்னையில் நேற்றைய மின் தேவையான 4,039 மெகா வாட்டும் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் டான்ஜெட்கோ கூறியுள்ளது. வெயில் காலங்களில் மின்சார தேவை என்பது அபரிமதமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமான அளவில் இருப்பதால், மக்கள் வெயிலின் தாக்கதில் இருந்து மீள குளிர்ந்த ஜுஸ், தண்ணீர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள் எந்நேரமும் ஏசி-யை போட்டு வைக்க வேண்டிய சூழலில் உள்ளனர். குளிர்சாதன பெட்டிகள், ஏசி, ஏர் கூலர்கள், ஃபேன்கள் என எல்லாவற்றின் தேவையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி வீட்டு உபயோகத்தை காட்டிலும், கடைகளுக்கான மின் தேவை தான் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னை மின் பயன்பாட்டில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்திருக்கிறது.

The post மீண்டும் புதிய உச்சம்: சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்பாடு.. டான்ஜெட்கோ அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Danjetco ,Dinakaran ,
× RELATED பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு...