![]()
டெல்லி: பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் கிடைக்கவில்லை என தெரிவித்து நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷணுக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிரிஜ் பூஷண் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த சிறுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு பாலியல் புகார் ஆகிய இவைதான் மிகவும் முக்கியமான புகராகும், ஏனென்றால் 18 உட்பட்டவராக அந்த சிறுமி இருப்பதாகவும் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அதாவது குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை, செய்யுபவர் மீது தொடரப்படக்கூடிய மிக கடுமையான ஒரு சட்டமாக இருக்கக்கூடிய சூழலில் இந்த போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை என்பது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த புகாரின் மீது டெல்லி காவல்துறை தனி கவனம் செலுத்தி வழக்கின் விசாரணையை நடத்தி வந்தனர், அவரிடமும் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் மல்யுத்த சமயத்தில் இருக்கக்கூடியவர்கள் மற்றம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரிடமும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை என்பது நடத்தப்பட்டது , சிறுமியிடம் கூட வாக்குமூலம் என்பது பதிவுசெய்யப்பட்ட இருந்தது. ஆனால் அவரது தந்தை அதாவது சிறுமியின் தந்தை பல்வேறு தருணங்களில் மாற்றி மாற்றி பல்வேறு விவகாரங்களை கூறிவந்தார். நீதிமன்றத்தில் ஒன்றாகவும் மற்றும் ஊடகங்களில் ஒன்றாகவும் குறிவந்துள்ளார்.
மீண்டும் அந்த விட்னெஸ் மீது வேறு ஒன்றாகவும் கூறிவந்தார், கடைசியில் அவர் என் குழந்தைக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவும் கொடுக்கவில்லை ஆனால் விளையாட்டு போட்டிகளின் போது குறிப்பாக மல்யுத்த போட்டிகளின் போது தனது மகளை அவர் பாகுபாடுடன் நடத்தினர், அதனால் தான் கோவத்தில் அவர் மீது புகார் அளித்திருக்கிறேன் என்பதாக ஒரு மிக முக்கியமாக திருப்புமுனையாக ஒரு விஷியத்தை கூறிருந்தார். இந்நிலையில் டெல்லி காவல்துறை டெல்லி நீதிமன்றத்தில் தற்போது மிகவும் முக்கியமான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. சிறுமி அளித்த புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததனால் ரத்து செய்யவேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.
The post பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் கிடைக்கவில்லை: நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.
