×

பீகாரில் பாலம் இடிந்து விழுந்த விவகாரம்: உயிரிழந்த காவலாளியின் உடல் 10 நாட்களுக்கு பிறகு கண்டெடுப்பு..!!

பகல்பூர்: பீகார் பாலம் விபத்தில் மாயமான காவலாளியின் உடல் 10 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தின் கங்கை ஆற்றின் குறுக்கே 1717 கோடி ரூபாய் மதிப்பில் சுல்தான் கஞ்ச் அகுபாணி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வழிப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் கடந்த 4ம் தேதி காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாலத்தின் ஒரு பகுதி 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில், அண்மையில் மீண்டும் இடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் விபாஷா குமார் என்ற காவலாளி பணியில் இருந்தார். விபத்திற்கு பிறகு அவர் மாயமானார். இந்நிலையில் விபத்து நடந்து 10 நாட்களுக்கு பிறகு காவலாளி விபாஷா குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், காவலாளி விபாஷா குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post பீகாரில் பாலம் இடிந்து விழுந்த விவகாரம்: உயிரிழந்த காவலாளியின் உடல் 10 நாட்களுக்கு பிறகு கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bridge ,Bihar ,Bhakalpur ,Bihar Bridge ,Bihar State Bhagalpur District ,Dinakaran ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்