×

ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி.. ரூ. 550 கோடி வசூலித்த முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

சென்னை: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ‘ஐஎப்எஸ்’ என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் கிளைகள் தொடங்கி பொதுமக்களிடம் முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10% வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வந்த அந்நிறுவனம் சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து 5,900 கோடி ரூபாய் மோசடி செய்தது. வட்டி, அசல் கொடுக்காமல் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் உத்தரவின் படி ஐஜி ஆசியம்மாள் மேற்பார்வையில் ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டு இருந்த 6 பேரிடம் இருந்து ரூ.1.14 கோடி ரொக்கம், ரூ. 39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 791 வங்கி கணக்கில் இருந்து ரூ.121 கோடி முடக்கப்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தேடி வந்த நிலையில் முன்னாள் காவல் அதிகாரியான ஹேமந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 2000 பேரிடம் ரூ. 550 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும், இந்த நிதி நிறுவன முக்கிய இயக்குனர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், இயக்குனர்கள் 4 பேரில் 2 பேரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி.. ரூ. 550 கோடி வசூலித்த முன்னாள் காவல்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai, ,PTI ,IFS ,Vellore district ,Kadbadi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...