×

சார்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

முசிறி, ஜூன் 15: முசிறி பத்திரபதிவு அலுவலகத்தில் சார் பதிவாளரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (70). இவர் நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக முசிறி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சார் பதிவாளர் கோகிலாவிடம் தகராறில் ஈடுபட்டு மரியாதை குறைவாக பேசியதுடன், சார்பதிவாளரை காரை ஏற்றி கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சார்பதிவாளர் முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் கடிதம் மூலமாக புகார் அளித்தார். டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பெண் சார்பதிவாளருக்கு பத்திரப்பதிவு செய்ய வந்தவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சார்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Mushiri ,Sar Registrar ,Press Registry Office ,Dinakaran ,
× RELATED சார் பதிவாளர் அலுவலங்களுக்குள் ஆவண...