×

செல்லாண்டிபாளையத்தில் பாசன வாய்க்காலில் முட்செடிகள் அகற்றப்படுமா?

கரூர், ஜூன் 15: கரூர் செல்லாண்டிபாளையம் வழியாக செல்லும் பாசன வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி ஆற்றில் செட்டிப்பாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்க்கால் செல்கிறது. அதுபோன்ற ஒரு பாசன வாய்க்கால் கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியிலும் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் அதிகளவு முட்செடிகள் படர்ந்துள்ளதால், வாய்க்காலின் தன்மை நாளுக்கு நாள் குறைந்து குறுகிய நிலையில் உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாசன வாய்க்காலை பார்வையிட்டு, புதர்களை அகற்றி, சீரான முறையில் தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post செல்லாண்டிபாளையத்தில் பாசன வாய்க்காலில் முட்செடிகள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Sellandipalayam ,Karur ,Karur Chellandipalayam ,Chellandipalayam ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்