×

ரத்ததான முகாம்

 

கம்பம், ஜூன் 15: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் கம்பம் வஉசி திடலில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னரசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தன்னார்வலர்கள் ஆசிரியர் பாண்டி, போட்டோ பாண்டி, யோகா ரவிராம், வின்னர் அலீம், தியாகராஜன், நத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் கம்பத்தில் உள்ள பல்வேறு தன்னார்வல அமைப்புகள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Ramadana camp ,Kampam ,World Blood Donation Day ,Theni District Indian Red Cross Society, ,Jr ,Blood Donation ,Camp ,Dinakaran ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...