×

பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக விழா

சிங்கம்புணரி, ஜூன் 15: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை, புஷ்கலை உடனான சேவகப் பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி யாகசாலை பூஜைகளுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதில் கோயில் முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் லிங்கம் ஓம், நாமம் உள்ளிட்ட வடிவங்களில் நெல் கொட்டப்பட்டு 1008 சங்குகள் அடுக்கப்பட்டது. சங்குகள் மற்றும் கடங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் தொடங்கியது.

சிவாச்சாரியார்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது 40 மணிக்கு சேவகப் பெருமாள் பூரணை, புஷ்கலை மற்றும் பிடாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சங்கு நீரை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, கோயில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Mandalabishek ,Perumal temple ,Singampunari ,Sevak Perumal Ayyanar Temple ,Pushkalai ,Sivakanga ,Devasthanam ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...