×

காலாவதி மருந்து விற்பனையா? மெடிக்கலில் மருந்து ஆய்வாளர் ஆய்வு

தேவகோட்டை, ஜூன் 15: தேவகோட்டை அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது குழந்தைக்கு சளி காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். அவர் எழுதிக்கொடுத்த சொட்டு மருந்தை தேவகோட்டையில் உள்ள மெடிக்கலில் வாங்கிச் சென்றார். வீட்டிற்கு வந்து மருந்தை பரிசோதித்த போது மருந்து பாட்டிலில் இரண்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தனக்கு காலாவதியான மருந்தை கொடுத்துள்ளதாக ராஜேஷ் மெடிக்கலில் சென்று கேட்டபோது அங்கு பணிபுரிபவர்கள் சரியான பதில் கூற வில்லை.

இதனால் காரைக்குடி மருந்தக ஆய்வாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்ததால், நேற்று அந்த மெடிக்கலில் காரைக்குடி மருந்து ஆய்வாளர் பாலாமாரி அதிரடி சோதனை மேற்கொண்டார். இதுகுறித்து மருந்து ஆய்வாளரிடம் கேட்டபோது, சந்தேகத்திற்குரிய மருந்து பாட்டிலை சோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். சோதனை முடிவில்தான் தெரியவரும். ஏன் மருந்து பாட்டிலில் இரண்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது என விசாரணை செய்ய உள்ளோம். காலாவதியான மருந்து என தெரிந்தால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post காலாவதி மருந்து விற்பனையா? மெடிக்கலில் மருந்து ஆய்வாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Rajesh ,Unchanai ,
× RELATED சென்னையில் அமைக்கப்படுவதை போன்று...