மதுரை, ஜூன் 15: பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை அணுகி, பாக்கு மட்டை பொருட்கள் தயாரிக்கும் மெஷின் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். இதற்கு அவர் ரூ.9.51 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சுரேஷ்குமார், கடந்த வருடம் செப். 28ல் ரூ.9.51 லட்சத்தை சசிகுமாருக்கு அனுப்பி உள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட அவர், இயந்திரத்தை இதுவரை அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்டபோது, சுரேஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சுரேஷ்குமார், நடந்த சம்பவம் குறித்து பாலமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சசிகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ரூ.9.51 லட்சம் மோசடி appeared first on Dinakaran.
