சென்னை: சென்னை அண்ணா சாலை வெலிங்டன் பிளாசா மதுபான கடை அருகே நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்டோ ஒன்று வெகு நேரம் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த போலீசார் நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்த போது, அதில், 393 மதுபாட்டில்கள் அடுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. உடனே மதுபாட்டில்களை கடத்த முயன்ற பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த சுரேஷ் சந்திரபாபு (42), பாலாஜி (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்திய 393 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தல் appeared first on Dinakaran.
