×

பழநி பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு சுகாதார நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

பழநி, ஜூன் 15: பழநி நகர் மற்றும் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி மற்றும் ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக கொசு தொந்தரவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே அதிக அளவிலான கொசுக்கள் கடிக்கின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நாள்தோறும் சுழற்சி முறையில் வீடுகள், தெருக்கள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மேலும், சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைகள் தேங்கி நிற்காத அளவிற்கு வடிகால்களை தூர்வார வேண்டும். குடியிருப்புகளின் அருகில் உள்ள மாட்டு தொழுவங்கள் உரிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு சுகாதார நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Nagar ,Balasamuthram ,Neykarapatti ,Ayakudy ,Dinakaran ,
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...