×

மின் கட்டணம், டெபாசிட் செலுத்த அவகாசம்

 

அவிநாசி ஜூன் 15: அவிநாசியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொ) சுமதி தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைபொதுச் செயலாளர் சரவணன் கோரிக்கை விடுத்தார். அதில் மாதாந்திர மின் கட்டணத்துடன் கூடுதலாக வந்த டெபாசிட் தொகைகளை தனித்தனியாக செலுத்தவும், அதற்காக, உரிய கால அவகாசமும் வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து மேற்பார்வை பொறியாளர் கூறுகையில், ‘மின் வாரிய இணைய தள சர்வரில் சில மாற்றங்கள் செய்து, தற்போது மின் கட்டணம் மற்றும் கூடுதலாக வந்துள்ள டெபாசிட் தொகைகளை தனித்தனியாக செலுத்த, உரிய வழிவகை செய்யப்பட்டு உரிய கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மின் கட்டணம், டெபாசிட் செலுத்த அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Superintending Engineer ,P) Sumathi ,Dinakaran ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...