×

பாளை ஹைகிரவுண்டில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த வாலிபருக்கு ரூ.200 அபராதம் விதிப்பு அதிகாரியின் அவசர போக்கால் பரபரப்பு

நெல்லை,ஜூன்15: அரசு பஸ்சில் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்து பயணித்த வாலிபருக்கு டிக்கெட் பரிசோதகரின் அவசர போக்கால் ரூ. 200 அபராதம் விதித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகேயுள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் டேவிட்(30). இவர் கடந்த 13ம் தேதி மாலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு ரெட் பஸ்சில் சந்திப்பு பகுதிக்கு ரூ.15 கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். இதையடுத்து பஸ் சந்திப்பு பஸ்நிலையத்திற்கு வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கினர். டேவிட்டும் இறங்கினார். அப்போது அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி பரிசோதித்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் டேவிட்டிடம் டிக்கெட் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் சட்டை பையில் டிக்கெட்டை தேடிய போது கிடைக்கவில்லை.

இதனிடையே டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கப்போவதாகக் கூறியுள்ளார். அதற்கு டேவிட் தான் டிக்கெட் எடுத்துவிட்டதாகவும் கொஞ்சம் பொறுங்கள் என கூறி மீண்டும் டிக்கெட்டை தேடினார். டிக்கெட் பையில் இருந்து எடுத்து அவரிடம் காட்டினார். அதற்குள் பரிசோதகர் ரூ.200 அபராதம் விதித்து அபராத சீட்டை கொடுத்து தொகையை செலுத்த கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டதை மாற்ற முடியாது என டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார். வேறுவழியின்றி அவர் ரூ.200 அபராத தொகையை அதிகாரியின் அவரசத்தால் செலுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

The post பாளை ஹைகிரவுண்டில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த வாலிபருக்கு ரூ.200 அபராதம் விதிப்பு அதிகாரியின் அவசர போக்கால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pala Highground ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்