×

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல், சித்தராமையாவுக்கு சம்மன்

பெங்களூரு: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த மே 9ம் தேதி, கர்நாடக பாஜ கட்சியை சேர்ந்த கேசவபிரசாத் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த மே மாதம் 5ம் தேதி, காங்கிரஸ் சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், அரசு ஒப்பந்தங்களில் பாஜ அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தது.அவதூறு பரப்பும் வகையில் தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜூலை 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

The post பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல், சித்தராமையாவுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Samman ,Sidderamiyas ,Baja ,Bengaluru ,Congress ,Rahul Gandhi ,CM ,Siddharamaiah ,Deputy Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief ,K.K. Sivagamar ,Siddaramiya Samman ,Dinakaran ,
× RELATED கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு...