×

அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர் நியமனம்: ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறி உள்ளார். ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களுக்கு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை உருவாக்குவதற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திட்டம் கடந்த 1997-98ல் தொடங்கப்பட்டது. 2013-14ல் 119 ஏகலைவா பள்ளிகள் இருந்த நிலையில், 2023-24ல் 401 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 2013-14ல் 34,365 ஆக இருந்த நிலையில் 2023-24ல் 1 லட்சத்து 13 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. 3.5 லட்சம் பழங்குடி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க கூடுதலாக 38,800 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர் நியமனம்: ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ekalaiva ,New Delhi ,Loddlife ,Egalaiva ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...