×

டெக்கான் கிரானிக்கல் மாஜி உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெக்கான் கிரானிக்கல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்களான டி.வெங்கட்ராம் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் வங்கிகளையும், பங்குதாரர்களையும் ஏமாற்ற நிறுவனத்தின் லாபம் மற்றும் விளம்பர வருவாயை உயர்த்தி காட்டி ரூ.8,180 கோடி வரை கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2015ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்தது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நேற்று விசாரணைக்குப் பின் டி.வெங்கட்ராம் ரெட்டியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் வெங்கட்ராம் ரெட்டியை சிபிஐ ஏற்கனவே கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post டெக்கான் கிரானிக்கல் மாஜி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Deccan ,D. Venkatram Reddy ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...