×

மனுநீதி நாள் முகாமில் ₹2.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சி குப்பம் ஊராட்சியில்

பேரணாம்பட்டு, ஜூன் 15: பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சி குப்பம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாமில் ₹2.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சி குப்பம் ஊராட்சியில் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார். தாசில்தார் நெடுமாறன் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ராஜகல் தலைவர் கருணாகரன், ஒன்றிய தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய துணைத் தலைவர் லலிதா டேவிட் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். இந்த மனுநீதிநாள் முகாமில் ₹2 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 114 மதிப்பில் பயனாளிகளுக்கு அயன் பாக்ஸ், டிராக்டர்கள், விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், தார்பாலின், விசைத்தெளிப்பான், நிலக்கடலை, விதைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: 425 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லாமல் இருக்கிறது. எனவே வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 10 நாட்களுக்குள் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அங்கன்வாடி மையம் பொது சுகாதார நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதேபோன்று பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தொடக்கப்பள்ளியில் சேர்க்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் தொடக்கப் பள்ளிகளின் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். அதில் 8 பள்ளிகள் பேரணாம்பட்டு ஊராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அரசு தேவை குறித்து குறைகள் ஏதேனும், இருந்தால் அதை என்னிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மனுநீதி நாள் முகாமில் ₹2.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சி குப்பம் ஊராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Achinji Kuppam panchayat ,Peranamptu ,Peranampatu ,Human ,Justice ,Day ,Achinchi Kuppam panchayat ,Human Justice Day ,Dinakaran ,
× RELATED பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பு...