×

நீட் தேர்வில் தேசிய அளவில் 720க்கு 720 பெற்று முதலிடம் பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவன்: பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து

திருவள்ளூர்: சென்னை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர் பிரபஞ்சன் 2023ல் நடைபெற்ற தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்று 720க்கு 720 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்கள் இத்தேர்வினை எழுதியுள்ளனர். மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் பிரபஞ்சனின் இச்சாதனையை நீட் அகாடமியின் முதன்மை முதல்வர் உமாமகேஸ்வரராவ் மற்றும் ஐஐடி, நீட் அகாடமி மற்றும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்த இமாலயச் சாதனைக்கு ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டலும் பெரும்பங்கு வகித்ததாக மாணவன் பிரபஞ்சன் நெகிழ்ச்சி தெரிவித்தார். பிரபஞ்சனின் வெற்றிக்குப் பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வாழ்த்து தெரிவித்து பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் அவர் கூறும்போது இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணம் பிரபஞ்சனின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையும் தான் காரணம் என தெரிவித்தார்.

நீட் 2023 தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனின் இமாலயச் சாதனையானது வேலம்மாள் கல்வி நிறுவனத்திற்குப் பெருமையைப் பெற்றுத் தருவதோடு, தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கி மேலும் கூடுதல் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் முகமாக அமைந்துள்ளது. மாணவன் பிரபஞ்சனின் வெற்றியானது இந்தியா முழுமைக்கும் உள்ள மாணவர்கள் உத்வேகம் பெறவும். தன்னம்பிக்கைக் கொள்ளவும் வழிகாட்டியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பிரபஞ்சனின் இமாலயச் சாதனைக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் உடன் பயின்ற மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

The post நீட் தேர்வில் தேசிய அளவில் 720க்கு 720 பெற்று முதலிடம் பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவன்: பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Vellammal ,Tiruvallur ,Velammal Vidyalaya School ,Chennai ,Upper Ayanambakkam ,Panpananan ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...