×

படகு கவிழ்ந்து 78 அகதிகள் பலி: 104 பேர் உயிருடன் மீட்பு

ஏதென்ஸ்: கிரீஸின் தெற்கு பெலோபொன்னீசில் இருந்து தென்மேற்கே 75கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் அகதிகளை ஏற்றி சென்ற மீன்பிடி படகு நள்ளிரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவலை அடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. 6 கடலோர காவல்படை கப்பல்கள், கடற்படை போர்க்கப்பல், ராணுவ விமானம், விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் தனியார் கப்பல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு அமைப்பின் டிரோன்கள் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் ஈடுபட்டன.

இதனை தொடர்ந்து மொத்தம் 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் கடலில் மூழ்கி உயிரிழந்த 78அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இன்னும் எத்தனை பேர் கடலில் மூழ்கினார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இத்தாலி செல்லஇருந்த இந்த படகு கிழக்கு லிபியாவின் டோப்ரக் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

The post படகு கவிழ்ந்து 78 அகதிகள் பலி: 104 பேர் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Athens ,southern Peloponnese, Greece ,Dinakaran ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...