×

ஊத்துக்கோட்டை 6வது நாள் ஜமாபந்தியில் 73 மனுக்கள் பெறப்பட்டன

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 73 மனுக்கள் பெறப்பட்டன. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று 6வது நாளாக நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சேகர் தலைமை தாங்கினார். தாசில்தார் வசந்தி, தனி தாசில்தார் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தியின் 6வது நாளான நேற்று ஒதப்பை, நயப்பாக்கம், நம்பாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உட்பட 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர்.

இதில் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரதீப் அசோக்குமார் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன் மற்றும் கிராம மக்கள் ஜமாபந்தி அலுவலரிடம், மாம்பாக்கம் ஏரிக்கரையில் பல வருடங்களாக வசிக்கும் 15 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் தோமூர் கண்டிகை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் 10 குடும்பங்களுக்கு வீடு மற்றும் மனைப்பட்டா வழங்க வேண்டும். கடந்த 2020-21ம் ஆண்டு ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணி தொடங்கவில்லை.

மாம்பாக்கம் அம்பேத்கர் நகரில் 1992ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டும் இதுவரை வருவாய் கணக்கில் சேர்க்கவில்லை. அதை சேர்க்க வேண்டும் என தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்களை வழங்கினர். 6வது நாளான நேற்று பட்டா மாற்றம் உள்ளிட்ட 73 மனுக்கள் வந்தது. இதில் 7 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 66 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டது. நிறைவாக தலைமை எழுத்தர் ஹேமகுமார் நன்றி கூறினார்.

The post ஊத்துக்கோட்டை 6வது நாள் ஜமாபந்தியில் 73 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Uthukkotta ,Jamapandi ,Jamabandhi ,Uthukukkodatta ,Jamapandhi ,Uthukkottai Thaluka ,Purukkotta ,
× RELATED செங்கரை காட்டுச்செல்லி அம்மன்...