×

நெல்லையப்பர் கோயில் விழாவுக்கு அமித்ஷா வருகை?

நெல்லை: நெல்லை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:
வருகிற ஜூலை 2ம் தேதி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்டம், சீரும், சிறப்புமாக நடக்கிறது. இதில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மெயில் மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். தேர்தலுக்கும், தேரோட்டத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. அதிமுக – பா.ஜ. கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரிடம் உள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் கட்சி போட்டியிட வேண்டும் என எல்லா கட்சிகளுக்குமே ஒரு வித கருத்து இருக்கும். தலைமை அனுமதித்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். அதிமுக – பா.ஜ. கூட்டணி எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்தமான கூட்டணியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நெல்லையப்பர் கோயில் விழாவுக்கு அமித்ஷா வருகை? appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Nellaiyapar temple festival ,Nellai ,BJP ,MLA ,Nayanar Nagendran ,Nellaiappar temple festival ,Dinakaran ,
× RELATED அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு...