×

வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த மழைநீர் கால்வாய்: சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், ஒன்றிய அலுவலகம், வங்கிகள், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், ரயில் நிலையம், நூலகம், சர் பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து ஒரகடம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவர்கள், வேலை முடிந்து வீடு திரும்பும்போது நாள்தோறும் வாலாஜாபாத் மார்க்கெட் பகுதிக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், வாலாஜாபாத் மார்க்கெட்டின் பின்புறம் உள்ள கால்வாய் சேதமடைந்து காணப்படுவதால், மார்க்கெட் வரும் கிராமமக்கள் கடும் சிரமப்பட்டு காய்கறி மூட்டைகளை வாகனம் நிறுத்தும் இடத்திற்கு எடுத்து செல்வதற்கு கால்வாய்களை தாண்டி செல்ல வேண்டிய சூழலும் நாள்தோறும் நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருசில நேரங்களில் காய்கறிகளுடன் கால்வாயில் விழும் சூழலும் நிலவுகின்றன. இதனால், பேரூராட்சி நிர்வாகம் வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைத்து தர வேண்டும் என கிராமமக்களும், மார்க்கெட் வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த மழைநீர் கால்வாய்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Walajahabad market ,Wallajabad ,Wallajabad market ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட...