×

செங்கல்பட்டில் கம்பி குத்தி கூலி தொழிலாளி பலி

செங்கல்பட்டு: கம்பி குத்தியதில் படுகாயம் அடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், இரு சக்கர வாகனத்தில் காஸ் சிலிண்டரை எடுத்து சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில், அந்த வாகனத்தில் இருந்த கூரான கம்பி சந்திரசேகரின் வயிற்றில் குத்தியது. இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டில் கம்பி குத்தி கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpat Chengalpattu ,Chengalpaddu ,Oblalur ,Chandrasekar ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு அருகே முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா