×

அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக தலைமை செயலாளரும், பயிற்சி துறை தலைவருமான இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மாதிரி ஆளுமை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 28.05.2023 அன்று நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய தேர்வர்களில் 31 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்களில் 7 பெண் ஆர்வலர்கள். குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜூன்-2023 முதல் செப்டம்பர்-2023 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 15.06.2023 (இன்று) காலை 10 மணி முதல் 17.06.2023 (சனி) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : All ,Service ,Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Head ,Department ,Thaoyanpu ,All India Civil Service ,India Civil Service ,
× RELATED மின்னகம் சேவை மைய தரவுகள் மூலம் மின்...