×

கனிமவள விதியில் திருத்தம் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கனிமவள சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கனிமவ வள வழக்கில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருவாய் துறையினருக்கா, போலீசாருக்கா என்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி, கே.முரளி சங்கர் ஆகியோர், ‘‘கனிமவள சட்டப்படி அதிகாரம் ெபற்ற அலுவலர் என்பது வருவாய்த்துறையினர் மட்டுமின்றி போலீசாருக்கும் பொருந்தும். சுற்றுச்சூழல் நலன் கருதி கனிமவள சட்டத்தின் 36 (ஏ) பிரிவில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வள வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் காலதாமதமின்றி விரைவாக வழக்குகளை விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post கனிமவள விதியில் திருத்தம் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Madurai ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...