×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை

சென்னை: சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையானது, 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. இதனையடுத்து அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது . இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை பார்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகைத்தந்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இதய இரத்த நாள பரிசோதனை நேற்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது என கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கே.கே. நகரில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனை சேர்ந்த 4 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ததில் இரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அவர்களும் உறுதி செய்தனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Omanturar Govt Hospital ,CHENNAI ,Chennai Greenway Road ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...