×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால், முல்லைப்பெரியாறு அணைக்கு 96 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 117.65 அடி. அணைக்கு 96 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2,204 மில்லியன் கன அடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இருப்புநீர் 2,236 மில்லியன் கன அடியாக உள்ளது.

126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.37 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 44.35 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் இருப்பு நீர் 254.80 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையளவு : பெரியாறு – 0.8 மிமீ, தேக்கடி – 0.8 மிமீ மழைப்பதிவாகி இருந்தது.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து appeared first on Dinakaran.

Tags : Periyaru Dam ,Cuddalore ,Mullapiriyaram Dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு...