×

அயிலை மீன் குழம்பு

தேவையானவை:

முழு அயிலை – (சுத்தம் செய்தது) 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 3
மீன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் – 1 டம்ளர்
கடுகு – 2 டீஸ்பூன்
மல்லித்தழை – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 2 டீஸ்பூன்
தக்காளி – 3 (நன்றாக அரைத்துக்
கொள்ளவும்)
வதக்கிய வெண்டைக்காய் – 10
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மீனை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். பின்பு எல்லா பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை நன்றாக வதக்கவும். அதில் அரைத்த பெரிய வெங்காயம், தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும். மீன் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும். இதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். மீனை சேர்க்கவும். இதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். கொத்துமல்லி தூவி இறக்கினால்
கம கமக்கும் அயிலை மீன் குழம்பு தயார்.

 

The post அயிலை மீன் குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...