×

ஏடிபி தரவரிசையில் 136வது இடத்திற்கு சறுக்கிய நடால்

லண்டன்: ஸ்பெயினை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். 37 வயதான இவர் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அண்மையில் பிரெஞ்ச் ஓபனில் பட்டம்வென்ற ஜோகோவிச், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் இவரது சாதனையை முறியடித்தார். களிமண் தரையில்ஆதிக்கம் செலுத்தும் நடால் பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 14 முறை பட்டம்வென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் போது ஏற்பட்ட இடுப்பு காயம் காரணமாக கடந்த 5 மாதமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனால் 2ஆயிரம் புள்ளிகளை இழந்துள்ள அவர் ஏடிபி தரவரிசையில்136வது இடத்திற்கு சறுக்கி உள்ளார். தனது 20 வருட டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக அவர் 100 இடத்திற்கு கீழ் சென்றுள்ளார்.

The post ஏடிபி தரவரிசையில் 136வது இடத்திற்கு சறுக்கிய நடால் appeared first on Dinakaran.

Tags : Nadal ,ATP ,London ,Rafael Nadal ,Spain ,Dinakaran ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி