×

இந்திய வீரர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: கவாஸ்கர் சாடல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: கடந்த 1974ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்சில் 42 ரன்களில் ஆட்டமிழந்த அணியில் நான் இருந்தேன், அந்த தோல்விக்கு பின் அறைகளில் நாங்கள் பரிதாபமாக இருந்தோம். கடுமையான விமர்சனங்களை சந்தித்தோம். எனவே, தற்போதைய நிலை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்று நீங்கள் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

எனவே என்ன நடந்தது, எப்படி அவுட் ஆனார்கள், ஏன் அவர்கள் நன்றாகப் பந்துவீசவில்லை, ஏன் கேட்ச் பிடிக்கவில்லை, பிளேயிங் லெவன் தேர்வு சரியானதா என அனைத்து காரணிகள் குறித்தும் விவாதிக்கவேண்டும்.அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 2 டெஸ்ட் உள்ளது. தற்போது அந்த அணி உலகின் சிறந்த அணி அல்ல. அவர்களை 2-0 என வென்றாலும் பெரிய சாதனை அல்ல. நீங்கள் இறுதிப் போட்டிக்குச் சென்றால், மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் விளையாடினால், அதே தவறுகளைச் செய்தால், கோப்பையை எப்படி வெல்வீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post இந்திய வீரர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: கவாஸ்கர் சாடல் appeared first on Dinakaran.

Tags : Gavaskar Chatal ,Mumbai ,Gavaskar ,England ,Dinakaran ,
× RELATED சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி