×

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற ரோகித்சர்மா முடிவு?

மும்பை: லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. லண்டனில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஒரு மாத ஓய்வுக்கு பின் இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20போட்டிகளில் மோத உள்ளது. முதல் டெஸ்ட் ஜூலை 12-16ம் தேதி வரையும், 2வது டெஸ்ட் ஜூலை 20-24ம் தேதி வரையும் நடக்கிறது. ஒருநாள் போட்டி முறையே ஜூலை 27,29, ஆக.1ம் தேதியும், டி.20 போட்டி ஆக. 3,6,8,12 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கிறது.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித்சர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 35 வயதான ரோகித்சர்மா இதுவரை 50 டெஸ்ட்டில் ஆடி 3437 ரன் எடுத்துள்ளார். கோஹ்லிக்கு பின்னர் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்ற அவரது தலைமையில் இந்தியா 7 போட்டிகளில் ஆடி 4ல் வென்றுள்ளது. அடுத்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் 2025ம் ஆண்டில் நடைபெற உள்ளது. அப்போது ரோகித்சர்மாவுக்கு வயது 38ஐ தொட்டுவிடும். இதனால் பிசிசிஐ மாற்று கேப்டனை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது.

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ரோகித்சர்மா விலக விரும்பினாலும் வெஸ்ட் இண்டீசில் தொடரில் அவர் கேப்டனாக தொடர பிசிசிஐ விரும்புகிறது. இதேபோல் மூத்த வீரர்கள் சிலருக்கு கல்தா கொடுத்துவிட்டு இளம்வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும். இதனிடையே வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கு பின் ரோகித்சர்மா டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த தொடருக்கு பின்னர் அடுத்த 4 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டி எதுவும் இல்லை. டிசம்பரில் தான் தென்ஆப்ரிக்காவுக்கு செல்ல உள்ளது. டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்ய போதிய கால அவகாசம் உள்ளது. இதனால் டெஸ்ட் கேப்டன் குறித்து இப்போதைக்கு எந்த அறிவிப்பும் வெளியாக போவதில்லை.

The post வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற ரோகித்சர்மா முடிவு? appeared first on Dinakaran.

Tags : Rochitsharma ,WestIndies ,Mumbai ,India ,Australia ,World Test Champion Ship Final ,London ,Rokitsarma ,WestIndia ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!