×

இலுப்பூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

விராலிமலை : இலுப்பூர் அருகே எண்ணை ஊராட்சியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் விளைவித்த நெற் மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி மெய்யக்கவுண்டம் பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இக்கொள்முதல் நிலையத்தில் இலுப்பூர், ஆலத்தூர், இருந்திராப்பட்டி, எண்ணை, புங்கினிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்க கூடிய நெற் மணிகளை இந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த நிலையமானது தற்போது இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த நெற் மணிகள் மூட்டையாக கட்டப்பட்டு சுமார் ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மீது பிளாஸ்டிக் பாய் போர்த்தப்பட்டுள்ளது இருப்பினும்அவ்வப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்தால் நெல் மூட்டைகள் ஈரமாகி விற்பனைக்கு தகுந்த நிலையை தாண்டிவிடும் இது விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் எனவே மெய்யக்கவுண்டம் பட்டி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இலுப்பூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paddy procurement station ,Ilipur ,Viralimalai ,Nilapur ,Lilapur ,Ilapur-Paddy Purchase Station ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி