×

இந்தோ- திபெத் போலீசில் கான்ஸ்டபிள்

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்

ஆண்கள் -08
பெண்கள் -01

வயது வரம்பு: 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பில் உளவியல் (Psychology) பாடத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.எழுத்துத்தேர்வு, பெட் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.06.2023.

The post இந்தோ- திபெத் போலீசில் கான்ஸ்டபிள் appeared first on Dinakaran.

Tags : Indo-Tibet Police ,Indo-Tibet Border Security Force ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...