×

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு: 2 நீதிபதிகள் பெயரை அறிவித்தது உயர்நீதிமன்றம்..!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு பரத சக்கரவர்த்தி விசாரிப்பார் என அறிவிக்கபப்ட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று அவரது வீடு மற்றும் தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எந்தவித சட்டவிதிமுறைகளையும் கடைபிடிக்காமல் எனது கணவரை கைது செய்துள்ளனர்.

இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. எனவே அவரது கைது செய்தது செல்லாதது என அறிவிக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சரும் வீட்டில் தான் இருந்தார். இந்த சோதனைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கினார். எந்தவித பிரச்சனைகளும் செய்யவில்லை. ஆனால், திடீரென நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு முன்பு அவரிடமோ, அவரது உறவினரிடமோ தெரிவிக்கவில்லை. சட்டப்படியும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், கைது செய்வதற்கு முன்பு தெரிவிக்க வேண்டும்.

எனவே, அவரது கைதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள் உங்களது மனுவை விசாரணைக்கு கொண்டு வருவதற்காக உள்ள நடைமுறைகளை முடித்து மதியம் 1.30 மணிக்கு நீதிமன்றங்களில் தெரிவியுங்கள். நாங்கள் அவசர வழக்காக எடுத்துக்கொள்கிறோம் என்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி சக்திவேல் மறுத்ததை அடுத்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். நீதிபதி சக்திவேல் விலகியதை அடுத்து புதிய அமர்வை உயர்நீதிமன்றம் அறிவித்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி விசாரிப்பார்கள் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு: 2 நீதிபதிகள் பெயரை அறிவித்தது உயர்நீதிமன்றம்..! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Nisha Panu Bharatha Chakrarthi ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...