×

கர்நாடகாவில் லாரி நிறைய கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தது எப்படி?

பெங்களூரு: கர்நாடகாவில் லாரியில் கொண்டு வரப்பட்ட வெடிபொருள்  வெடித்ததில் 5 பேர் இறந்தது பற்றி உயர்மட்ட விசாரணை் நடத்த எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.  கர்நாடக மாநிலம்,  ஷிவமொக்கா மாவட்டம், ஹுணசோடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்  குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்காக, பாறைகளை உடைப்பதற்கு தேவைப்படும் வெடி பொருட்கள் ஏற்றிய லாரி,  நேற்று முன்தினம் நள்ளிரவு ஹுணசோடி  வந்தபோது, திடீரென பயங்கரமாக வெடித்தது. இதில் பீகார் தொழிலளர் 5 பேர் பலியாகி கிடந்தனர்.  சிலர் படுகாயத்துடன் ீமீட்கப்பட்டு, மருத்து வமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.இது தொடர்பாக, குவாரி உரிமையாளர் சுதாகர், வெடி  பொருட்கள் சப்ைள செய்த நரசிம்மா,  குவாரிக்கு நிலம் வழங்கிய  அனில்குல்கர்னி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட  விசாரணை நடத்த முதல்வர்  எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும்,  உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி  அறிவித்துள்ளார்.        …

The post கர்நாடகாவில் லாரி நிறைய கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தது எப்படி? appeared first on Dinakaran.

Tags : carnataka ,Bengaluru ,Etuarapa ,Karnataka ,Dinakaran ,
× RELATED கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை...