×

போளூர் அல்லிநகர் பகுதியில் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

போளூர் : போளூர் அல்லிநகர் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த உற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அல்லிநகர் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

அன்று முதல் விநாயகர் சிறப்பும், வியாசர் பிறப்பும், கீசகன் வதமும் பீமனின் சாகசமும், வைகுந்தன் தூதும், மன்னன் வாதும், ராஜசுய யாகம், அரவான் களபலியும், மகாகாளியின் அருளும், அபிமன்யு வீழ்ச்சியும் அர்ச்சுனன் பக்தியும், பகடைதுகில், தபசுநிலை, குறவஞ்சி, போர்மன்னன் சண்டை, அபிமன்யு போர், கர்ணன் மோட்சம், வில்வளைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தினமும் மகாபாரத சொற்பொழிவுடன் அம்மனுக்கு அலங்கார அபிஷேகங்களும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திரவுபதியம்மன் அர்ஜூனருக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.விழாவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் உச்சியில் தபசு செய்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டினார். இந்த பாசுபதாஸ்திரம் மகாபாரத போரில் கர்ணனை வெல்ல அஸ்திரம் ஆகும். இந்த தபசு மரத்தை சுற்றிவந்து திருமணமான பெண்கள் குழந்தைகள் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணம் வேண்டியும் சுற்றி வந்து வணங்கினர்.

அதனை தொடர்ந்து குறவன் குறத்தி வேடத்தில் ஈசன் வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினார். கோயில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட களிமண் சிலை கொண்டு, தெருக்கூத்து கலைஞர்களால் துரியோதனன் படுகளம் நடந்தது, மாலையில் அம்மன் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பக்தியுடன் தீயில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் நகர பகுதியில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post போளூர் அல்லிநகர் பகுதியில் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் appeared first on Dinakaran.

Tags : Duryodhana Padukalam ,Draupathi Amman Temple ,Polur Alinagar ,Polur ,Duryodhan ,Bolur Alinagar ,Agni Vasant Utsava festival ,Duryodhana ,Dinakaran ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...