×

ஆரணி அடுத்த அகிலாண்டபுரம், வெள்ளூர் கிராமத்தில் ஆறு, முட்புதர், விவசாய நிலங்களில் பதுக்கிய 20 யூனிட் மணல் பறிமுதல்

ஆரணி : ஆரணி அடுத்த அகிலாண்டபுரம், வெள்ளூர் கிராமத்தில் ஆறு, முட்புதர், விவசாய நிலங்களில் பதுக்கிய 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி உத்தரவின் பேரில், ஆரணி மற்றும் போளூர் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, அகிலாண்டபுரம், வெள்ளூர் பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து மணல் கடத்தி வந்து, குவியல் குவித்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, முள்புதர், விவசாய நிலங்களில் விற்பனைக்கு கடத்தி செல்ல குவித்து வைத்திருந்த 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மணல் கடத்தலை தடுக்க ஆற்றுப்பகுதிகளில் ஜேசிபி மூலம் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டது.

பின்னர், விவசாய நிலம், முள்புதர்களில் ஆற்றில் இருந்து கடத்திவரப்பட்டு குவியல் குவியலாக சேகரித்து வைத்திருந்த மணலை சமன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வருவாய்துறை அதிகாரிகள் அகிலாண்டபுரம், வெள்ளூர் கிராமங்களில் குவியல் குவியலாக மணலை பதுக்கி வைத்த நபர்கள் யார்? குவித்து வைத்துள்ள மணலை எங்கு கடத்தி சென்று விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆரணி அடுத்த அகிலாண்டபுரம், வெள்ளூர் கிராமத்தில் ஆறு, முட்புதர், விவசாய நிலங்களில் பதுக்கிய 20 யூனிட் மணல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Arani ,Akhilandapuram ,Vellore village ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு