×

கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வை களத்தில் இல்லாமல் செய்தவர்: அரசியல் களத்தில் இல்லாமல் செய்யவே செந்தில் பாலாஜி கைது: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்

சென்னை: கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வை களத்தில் இல்லாமல் செய்தவர். அரசியல் களத்தில் இல்லாமல் செய்யவே செந்தில் பாலாஜி கைது என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; எப்படிப்பட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய எந்த வழிகாட்டுதல்களையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை.

அமலாக்கத்துறை நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தின் நடைமுறையை தகர்த்துவிடும். தலைமைச் செயலகத்தில் வந்து சோதனை செய்யும்போது தலைமைச் செயலாருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. களப்பணியாற்றக்கூடிய முக்கியமானவர்களை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வை களத்தில் இல்லாமல் செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அரசியல் களத்தில் இல்லாமல் செய்யவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.

The post கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வை களத்தில் இல்லாமல் செய்தவர்: அரசியல் களத்தில் இல்லாமல் செய்யவே செந்தில் பாலாஜி கைது: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kongu ,Senthil Balaji ,Peter Alphonse ,CHENNAI ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...