×

திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்: அமைச்சர் ரகுபதி

சென்னை :திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது, “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் அமலாக்கத்துறையின் செயல் முழுக்க முழுக்க மனித உரிமை மீறல்.அவர் கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை.எதற்காக விசாரிக்கிறோம் என்று உறவினர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.மக்கள் மன்றத்தின் முன்பும் மக்கள் முன்பும் பாஜக அரசு பதில் சொல்லியாக வேண்டும்.அமைச்சர் செந்தில் பாலாஜியை மன உளைச்சலுக்கு ஆளாக்கவே அமலாக்கத்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது,”என்றார்.

 

The post திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Djagam ,Minister ,Ragupati ,Chennai ,Dizhagam ,Law Minister ,Kazhagam ,
× RELATED செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு